தென்னை மர தூது
தென்னை மர தூது


உ்னையே தினமும்
உற்று பார்க்கிறேன்!
அம்மாவின் சுவாசமும்
அப்பாவின் நேசமும்
அண்ணன் அக்காவின் சிரிப்பும்
கீற்றுகளாய் விரிந்திருக்க
உறவுகள் யாருமின்றி
சுருங்கிய கன்னங்களின்
மனம் மகிழ்ச்சியால்
சிறகடிக்க தாகம் தீர்க்க
தேங்காய்களாய் தொலைவண்டியில்
திருச்செந்தூருக்கு
போவாயோ!