சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்


சொற்கள் மற்றும் வரிகள் - கவிதைப்போட்டி
---------------------------------------------------------------------------------
♪ சிலப்பதிகாரம் ♪
-------------------------------------
( புகார்நகர் பொன்னி : கண்ணகி)
கட்டுரை கண்டது காவிய மாகுமா
பட்டுரைத்த கண்ணகி துயரம் போகுமா
பொன்னி ஆறில் புகார் திருநகரம்
கன்னியர் கொஞ்சம் நெய்தல் நல்நகரம்
மங்கை கண்ணகி மாண்பே பூம்புகார்
பொங்கும் கண்ணீரும் புனலாய் பொங்கும்
நாடக உலகில் நாட்டங் கொண்டே
ஆடல் மாதவி அழகில் கிடந்தே
கோவலன் என்பான் குற்றம் புரிந்தான் -
பாவலன் செய்த காதை காப்பிய உவகை;
சோழர் நகரப் பாவை நல்கண்ணகி
ஏழை யானாள் பேதை துயரம்
மாதவி நல்லாள் மனதிற் குற்றம்
பாதகம் செய்யா துணிவில் குணவதி
வினையில் வந்தது சிலம்பும் கொண்டது
பனையாய் தீங்கை செய்தான் மன்னன் -
ஆய்ந்து செய்க வினை அதுவல்லால்:
தீய்ந்து போகும் திருவினை தாக்கும்
இளங்கோ போற்றிய சமணச் சமயம்
களங்க மில்லா காப்பியச் செய்யுள்
சிலப்பதிகாரம் என்றதொரு விழிநீர்க் கதை - அது
பல்வகை அறஞ்சொல்லும் தமிழ்க்காதை.