மயக்கம் என்ன
மயக்கம் என்ன


நுகர்வு வெறியில்
மயங்கிக் கிடக்கும்
புலன்களின் அறியாமையில்
உணர்வுகளும் சேர்ந்து புலன்களுக்கு ஆதரவு கொடுக்க
இன்பம் துய்த்து
துய்த்த இன்பத்தால்
புலன்கள் மரத்துப்போக
மதிமயங்கி
உணர்வுகள் மழுங்கி
நுகர்ந்த இன்பங்களை
மனது நினைவு வைத்திருப்பதால்
மீண்டும் மீண்டும்
அதே இன்பங்களைத் தேடி ஓடி
இன்பங்கள் கிடைத்தாலும்
நுகர முடியாது
உடல் சோர்வுறும்போது
மனம் வெறுப்படைந்து
பழைய நினைவுகள்
ஏக்கமாக மாறி
மனதை அலைக்கழிக்கும் போது
எதிலும் சுவாரசியமின்றி
சலிப்படையும் போதுதான்
புலன்களால் உருவாகும் இன்பம்
பூஜ்ஜியம் என்பது புரியும்!