பிசாசுகள்
பிசாசுகள்
1 min
238
கடந்த காலக்
கவலைகளும்
நிகழ்காலப்
பிரச்சினைகளும்
எதிர் கால பயங்களும்
பிசாசுகளாய்
மனதை துவம்சம்
செய்யும் போது
உள்ளிருக்கும்
கோபம், பொறாமை, பேராசை போன்ற எண்ணற்ற
அழுக்குப் பிசாசுகள்
மனதை ஆட்டி வைக்க
என்ன செய்வது என்று
மூளையின் செல்கள்
திகைத்துத் திணற
உதவி செய்ய நினைக்கும்
ஆன்மா
பிசாசுக் கூட்டத்தில்
மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி
பின் எப்படியோ
விழித்தெழுந்து
பிசாசுகளை
ஓட்டிய பின் தான்
வாழ்க்கையின்
அர்த்தம் புரியும்!