நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழக
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழக


மருமகள் என்றாலே
அடுத்த வார்த்தை மாமியார்
என்னே ஒற்றுமை!!!
மகளென நினைக்கனும்
மத்தியஸ்தமாய் இருக்கனும்
உணர்வை மதிக்கனும்
தன் குணத்தால்
உயர்ந்தவராய் ஆகனும்
மருமகள் மனதில்!!!
தாயென நினைக்கனும்
சங்கடங்கள் தீர்க்கனும்
வைலையை பகிரனும்
உடல்நலம் பேணனும்
திருமகளாய் ஆகனும்
மாமியார் மனதில்!!!
தாயையும்
நினைக்கனும்
தனக்காக வந்தவளின்
கருத்தையும் மதிக்கனும்
அவள் பெற்றோரையும்
தந்தை தாயென நடத்தனும்
மகிழ்ச்சியின் பாலமாய்
விளங்கனும் அனைவர் மனதிலும்!!!
சந்தோஷம் தேடி வரும்
இன்பங்கள் நாடி வரும்
உறவுகள் கூடி வரும்
இப்படிபட்ட குடும்பத்தில்!!!
மாமனார் என
ஒரு மனுஷன்
இருப்பதையும் மறக்காமல்
தந்தையாய் பாசம் காட்டனும்!!!😜😜😝