என் அம்மா
என் அம்மா
அம்மா !நீ மட்டும் உயிரோடு
இருந்திருந்தால் என் கண்ணீரை
இப்படி சிந்த விடுவாயா அம்மா?
உன் அருமை புரிகிறது அம்மா
இப்போது எனக்கு
நீ என் அருகாமையில் இல்லை
ஆனால் நானோ உன் வெகு அருகாமையில்
என்னை கண்ணிமை போல் காத்தாயே
ஒரு ஈ எறும்பு அண்ட விடுவாயா அம்மா?
உழைத்தாய் உழைத்தாய் கடுமையாக. உழைத்தாய்
நான் உயரத்தான் என்று
இன்று புரிகிறது அம்மா
நான் அழுதாலும் ஓடி வருவாய் நீ,
நான் அழாமல் ஏ ஓடி வருவாய் நீ
அம்மா ஓடி வருவாய் ! ஓடி ஓடி வருவாய் ! ஊட்டி விடுவா ய்
நான் குழந்தையானாலும்
குமரி ஆனாலும்
கண்ணில் தூசி விழுந்தாலும்
கலங்கி நிற்பாய்ஏ அம்மா
கலங்கி நிற்பாயா அம்மா நீ. கலங்கி நிற்பாய
ா அம்மா
நீகலங்கி நிற்பாய்ஏ ஏனென்று
எனக்கு அழுகை என்றால் என்ன?
என தெரியாமலே வளர்த்தாய் அம்மா
இன்று பிரிந்து அழுகின்றேன் அம்மா. உன்னை
இனி யார் என் கண்ணீரைத் துடைப்பது அம்மா
யார் என் கையைப் பிடிப்பது அம்மா
அம்மா என்றால் அன்பு என்றாயே
அன்பை ஊட்டி அமுது தந்தாயே
அன்பாலே எனை
அம்மா இதுதான் அம்மா
எனக்காக நீ சிந்திய வாழ்நாள் கண்ணீரை
என் நாளில் அடைக்க இயலுமோ????
என்னால் இயலுமோ அம்மா
அம்மா அம்மா அம்மா நீ என்றும் என் மனதில்
கோடி ஜென்மம் எடுத்தாலும் அடைக்க இயலுமோ
அம்மா பிறவிக் கடனை நானே!!!!
உன்னை. எங்கே தேடி அலைவேன் அம்மா????
என் அம்மா !!!என் அம்மா. !!!! என் அம்மா!!!