STORYMIRROR

Mohana Iyyadurai

Abstract

4  

Mohana Iyyadurai

Abstract

புத்தகம்

புத்தகம்

1 min
368


அறிவை வளர்க்கும் ஆசானாய்,

ஆற்றலைத் தந்திடும் வித்தகனாய்,

இதிகாசம், புராணம் இலக்கணமாய்,

ஈடிலா அறிவை தந்திடுமே!

உவகையுடன் நாம் படித்திடவே,

ஊருடன் ஒத்து வாழ்ந்திடவே,

என்றும் யாவரும் பழகிடவே,

ஏட்டினில் அறிவைக் கொடுத்திடுமே!

ஐயமற நாமனைத்தும்அறிந்திடவே,

ஒற்றுமை வாழ்வின் மகிழ்வுதனை,

ஓம்பி வாழ்வதின் அவசியத்தை,

ஔவை மொழியில் அளித்திடுமே!

அஃகுதல் இன்றி நல்கிடுமே!

நல்புத்தகம் தன்னை துணை கொள்வோம்!

நாளும் வாழ்வில் உயர்ந்திடுவோம்!!






Rate this content
Log in

Similar tamil poem from Abstract