விட்டு விடுதலையாவோம் !
விட்டு விடுதலையாவோம் !


ஓடும் மேகங்களின் மத்தியில்
ஒளிர்ந்திடும் வட்ட நிலவினையே
ஒற்றைச் சாளரத்தின் கம்பிகளூடே
ஒருக்களித்து நின்றவாறே இரசிக்கிறேன் !
ஏனோ - சிறைப்பட்ட நிலவினை இரசிக்க
மனம் ஒப்பாத வேளையிலே
சாளரத்தை விட்டு விலகியே
வாசற் கதவினை அகல திறந்து
வானில் மெல்ல பார்வையை ஓட்ட
விட்டு விடுதலையானது -
நிலவு மட்டுமல்ல ! - சிக்குண்டு தவித்த
மன எண்ணங்களுமே தான் !