காரணம் என்னவோ?
காரணம் என்னவோ?
நையாண்டிக் கவிதை:
பாடித் திரியும்
புள்ளினமும்
சுற்றி வரும்
நாயும் பூனையும்
ஆச்சர்யமாய் முகம் நோக்கி
நின்றே - அடையாளம் அறியாது
குழம்ப - காரணம் என்னவென
யோசிக்கிறேன்!
அட! முகக் கவசம் -
காற்றையும் நீரையும் மாசாக்கி
இயற்கையை இம்சை செய்து
இன்பமாய் காலம் கழித்தீர்!
இப்போது இயற்கை
உங்களுக்கே திரும்ப
பன்மடங்காய் கொடுக்கிறது -
அனுபவித்து மகிழ்வீரென்றே
நக்கலாய் சிரித்தே
நகர்தோடி செல்கின்றன!