Jeans pant
Jeans pant
அன்று மேற்கில் இருந்து வந்தேன் ...
இன்று உலகம் சுற்றிய வாலிபன் ...
பணக்காரனுக்கும் சாதகமாவேன் ...
ஏழைக்கும் எட்டிடுவேன் ...
யாவரும் கேளிர் என்பதற்கு எடுத்துக்காட்டாகயிடுவேன் ...
உடை அரசியலை உடைத்தெறிந்தேன் !
மழையில் நான் காய மறுத்திடுவேனே ...
கோடையில் உனக்கு காயம் கொடுத்துடுவேனே ...
தண்ணீரை கண்டதில்லை ஒரு வாரமாக ...
கறைகளும் நெருங்குவதில்லை அது வரமாக ...
கிழிஞ்சாலும் ஒரு புதுமையே ...
தேய்ந்தாலும் ஒரு மகிமையே ...
குறையாது உன் இளமையே !
ஆண் பெண் பாகுபாடு இல்லை என்னிடம் ...
எவ்வித நிறத்துக்கும் பொருந்துவேன் ...
சமத்துவத்தை சகஜகமாக உணர்த்துவேன் !
உன் அலமாரிக்குள் ஓய்வெடுக்க துடிக்கும் ஓயாத நான் !
----- இப்படிக்கு ஜீன்ஸ் pant
