STORYMIRROR

naga raj

Abstract

4  

naga raj

Abstract

அப்பா

அப்பா

1 min
830

அன்னை

அறிமுகம் செய்து வைத்த

உயிரான உறவு நீ…

நடை பயிலும் போதெல்லாம்

விழாமலிருக்க

என்னோடு வந்தவர்…

இன்றுவரை

தாங்கி நிற்கின்றார் தூணாக…

அன்னையிடமிருந்து

காக்கும் அரணாகவும்…

தோற்கின்ற பொழுது 

தோள் தட்டிக் கொடுக்கும்  

தோழனாகவும்… 

எனக்கொன்று நடந்தால் 

தனக்கு

வலியென துடிக்கும்

என் தெய்வம்…

தன்னை விட 

நான் 

மகிழ்ந்திட வேண்டுமென… 

உன்

ஆசைகளை புதைத்துக் கொண்டாய்…

எந்தன்

வெற்றியின் மகிழ்ச்சியை

உந்தன்

முகத்தில்  கண்டேன்..

என்னை

குறை சொல்பவர்களிடம் 

செவிசாய்த்ததில்லை…

நான் 

கேட்ட கேள்விக்கெல்லாம் 

சலிக்காமல்

பதில் சொன்ன புத்திசாலி…

என்னையே

உலகமென நினைத்து வாழும்…

என் அன்பு

தெய்வமே…

எனக்கொரு 

ஆசை

என் தோளில்

உந்தன் கை போட்டு 

நடக்க காத்திருக்கின்றேன்…

தந்தையே

தக்க தருணம் பார்த்து…!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract