STORYMIRROR

naga raj

Abstract

3  

naga raj

Abstract

அம்மா

அம்மா

1 min
857

என்னை

காணும் முன்னே 

நேசிக்க தொடங்கியவள்…

முதல் அழுகையை 

மயக்கத்தில் ரசித்தவள்…

எந்நேரமும்

என்னைப்பற்றி நினைப்பதால்

தடுக்கி விழும்போது கூட

அம்மா என்றே வரும்…

அழுகையை

வைத்தே காரணமறிவாள்..

என் 

உடலில் காயம் கண்டால்

குருதி வரும் முன்னே…

அவள்

கண்கள் குளமாகியிருக்கும்…

எந்தன் மகிழ்ச்சியே 

தன் மகிழ்ச்சியென வாழ்பவள்… 

என்றுமே

என்னை வெறுத்திடாத

என்னுலகம்…! 

நோயோன்று வந்தால் 

அவளின்

பராமரிப்பிலே விலகிவிடும்…

தாய்மடிக்கு

நிகரான தலையணை இல்லை…

எத்தனை வயதானாலும்

என்றைக்குமே

குழந்தையென பார்ப்பாள்…

எந்தன்

குரலை வைத்தே

என் மனம் அறிவாள்…

இவ்வுலகில்

அன்னையின்

அன்பிற்கு

ஈடில்லை இதுவரை…

இறைவனே ஏங்கி நிற்பான்

தாயின் பாசம் கிடைத்திட ...!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract