மழலை
மழலை


உன்
பிஞ்சு விரல்கள்…
என்
முகத்தில் மோத
உலகையே மறந்தேன்…
நீ
தூங்கும் அழகை ரசிக்க..
என்
தூக்கம் தொலைத்தேன்…
உந்தன்
அழுகையின் போதெல்லாம்…
அன்னையின்
இதயத்துடிப்பு தாலாட்டு…
தந்தையின்
நெஞ்சு தொட்டில்…
பற்களின்றி
சிரிக்கும் அழகைக் கண்டு
சிற்பமென நானிருக்க…
நீ
101, 101);">தவழ்ந்து வரும் போது
தாங்கி நிற்கும்
பூமாதேவி
பூரித்து நிற்கின்றாள்…
நீ பாடும்
ஆனந்த ராகம் கேட்க
குயில்கள் காத்திருக்கின்றன…
உன்
தத்தி தவழும்
நடை காண
மயில்கள் காத்திருக்கின்றன…
எந்தன்
கவலைகளை மறக்க
உன்
புன்சிரிப்பு போதும்…
மண்டியிட்டு
என்னை பார்க்கும் போது
மயங்கி நிற்கின்றேன்
மகிழ்ச்சியான மழலையைக் கண்டு…!