எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு

1 min

1.1K
முலாம் இல்லா பிம்பம்...
ஒப்பனை பூசா முகம்..
வேஷம் தாங்கா உறவு...
கலப்படமில்லா அன்பு...
பொய் புனையா வார்த்தை...
அகமும் புறமும் வேறில்லா ..
தெரிந்ததும் புரிந்ததும் வேறில்லா ..
கண்டதும் உணர்ந்ததும் வேறில்லா
கேட்டதும் அறிந்ததும் வேறில்லா
ஏமாற்றங்கள் கொடுக்கா சுயம்.......
கடக்கின்ற நாட்களில்.....
அழுத்தங்கள் இல்லா பயணத்திற்கு....
உள்ளும் வெளியும் ஒன்றாகிப்போன பிரதிபலிப்பு.....
வேறு என்ன பெரிதாய் எதிர்பார்த்து விடப்போகிறேன்.....