எத்தனை நாளைக்கு...
எத்தனை நாளைக்கு...
என்றுமே தொடர்பில் இருந்தவர்கள் ..
அவசர நேரத்தில் தொடர்பற்றுப் போயிருக்கிறார்கள்.......
சார்ந்தவர்களின் நலம் விசாரிப்பு அவர்களுக்கு தேவையற்று போயிருக்கிறது...
இவர்கள் இருக்கிறார்கள் அவசர் சமயத்தில் என்ற எண்ணங்களை பொய்யாக்கி போயிருக்கிறது ....கடந்த நாட்கள்..
என்றோ சந்தித்தவர்களின்....
முகம் மட்டுமே பரிச்சயனான்வர்களின்... குறுசெய்திகளில்...அழைப்புகளில் ... நிரம்பி வழிகிறது கண்ணும்.. காதும்...மனதும் கூட... அவ்வப்பொழுது...
எப்படியிருக்கிறாய் என்ற அவர்கள் கேள்வியில் மனமுழுதும் கொட்டிவிடத்தோன்றுகிறத
ு எதோ ஒரு ஆசுவாசம் நாடி....
பத்திரமாயிரு....என்று சமூக ஊடங்கள் கதறிக்கொண்டே இருக்கின்றன்.....
கவனமாய் உடனிருப்பவர்களை காப்பாற்ற வேண்டும் என்று படபடத்துகொண்டேயிருக்கிறது மனது....
எதோ ஒரு நற்செய்தி வராதா என்ற எதிர்பார்ப்பிலேயே விடிகிறது ஒவ்வொரு பொழுதும்..
சுற்றி ஆளில்லா பயணத்தில் வாழ்க்கை விசித்திரமாய் தெரிகிறது சில பொழுதுகளில்....
இன்னும் எத்தனை நாட்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லாமலேயே முடிந்து போகின்றன ஒவ்வொரு நாளும்......
இன்றையப் பொழுது உட்பட...