வீடே அலுவல்..
வீடே அலுவல்..


வாகனத்தை தொடைப்பது...
சக்கரத்தில் காற்று சோதிப்பது..
பெட்ரோல் பூத் போவது ..
எதுவும் இப்பொழுது இல்லை
ஆடைக்கசங்குவது....
என்ன உடை...
எங்கே இருக்கிறது..
எந்த காலணி,,.
எங்கே ஷூ பாலிஷ்..
இந்த கவலைகள்..
எதுவும் இப்பொழுது இல்லை...
மதிய உணவு பொதிசெய்தல்
தண்ணீர் குடுவை நிரப்புவது..
சிற்றுண்டி பொதி செய்தல்..
எதுவும் இப்பொழுது இல்லை....
தன்னோடு பேசுவது....
வேடிக்கை பார்ப்பது...
போக்குவரத்து நெரிசலில் காத்திருப்பது ...
சுற்றமும் நட்பும் சார்ந்த சில அழைப்புகள்..
பயண நேரமின்றி
எதுவும் இப்பொழுது இல்லை...
ஒரு தேயிலையில் சில உரையாடல்கள்...
ஒரு மேசையில் கதம்ப சாதம்
ஒரு குறு நடை.....
சில் கடலமிட்டாய் பரிமாற்றங்கள் அதை சார்ந்த பங்கு பிரிக்கும் சின்ன சண்டைகள்...
>எதுவும் இப்பொழுது இல்லை...
இத்தனை மணிக்கு வருவேன்
நேரம் ஆகும் ...கவலை வேண்டாம்..
பத்திரமாய் வந்துவிடுவேன்..
இரவு உணவு வேண்டாம்..
வந்து கொண்டிருக்கிறேன்...
இதோவந்துவிட்டேன்... சொல்லவேண்டிய அவசியம்
எதுவும் இப்பொழுது இல்லை....
என்ன பண்ணீங்க...
அப்பா சொல்பேச்சு கேக்கலியா..
அம்மா திட்டினாங்களா...
என்ன ஆச்சு...
என்ன பண்ணீங்க ..
யார் மேல தப்பு..
அக்கா என்ன சொன்னா ..
பக்கத்து வீட்டு பாப்பா என்ன பண்ணா..
வினவல்களுக்கு அவசியம்
எதுவும் இப்பொழுது இல்லை...
மடிக்கணணியும்..
கைபேசியும் ....
அழைப்புகளும்..
முழுநேரத்தையும்
முழுங்கிவிட்டப்பிறகு....
எtதுவும் இப்பொழுது இல்லை.
ஆமாம்...
வீடே அலுவல் ஆகி போனதால்...
அலுவலே வீடாகி போனதால்....!!