Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

நீக்கமற நிறைந்திருக்கும் குளிர

நீக்கமற நிறைந்திருக்கும் குளிர

1 min
610


இலைகளை சருகுகளாக்கி

தோலுரிக்கும் அரவத்தைப் போல்

சருகுகள் தனை உதிர்த்து

நிலமகளுக்கு போர்வையாக்கி

எதிர்வரும் குளிர் காலத்திற்காய்

அவளை பக்குவமாய் தயார்படுத்துகிறாளோ

இயற்கை அன்னையவள் ?


காற்றில் சலசலத்தே

உருண்டோடும் சருகுகளின்

களிப்புச் சிரிப்பும்

காற்றின் தீரமாட்டா

இசைத் தாகமும் இணைய

தன் கிளைக் கரங்களை விரித்து

நர்த்தனமாடி களிக்கிறாள் மர வனிதை!


சிலகாலம் தீராப் போதையினை போல்

குளிரும் ஆட்கொள்ள - கூவவும் கத்தவும்

மறந்த புள்ளினங்களும் ஒடுங்கிப் போய்

கதகதப்பு தேடி நிற்க -அவ்வப்போது

தலைகாட்டி தன்னிருப்பை

உறுதிபடுத்தும் கதிரோனால் கூட

மேகத்தினையும் பனிப்போர்வையையும் தாண்டி

பளீரென தன் ஒளிக்கரங்களை நீட்டவும்தான் முடியவில்லை !


கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும்

பனிப் போர்வையால் மூடப்பட

பனிமூட்டமதில் ஊரே மூடியிருக்க

காற்றும் கூதிருக்கு துணைபோக

பாரபட்சம் சிறிதுமின்றி

அங்கிங்கெனாதபடி நீக்கமற

எங்கும் நிறைந்திருக்கும் குளிர் !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational