STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

5  

Manoharan Kesavan

Inspirational

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

1 min
487

கொரோனாவில் கண்ணயர்ந்து...

ஓமிக்ரானில் கண்விழித்து

மெல்லவே எட்டிப் பார்க்கிறது...வருகின்ற

புது வருடம்...2022...

உடலை திடம்கொள்...

உறவை பலம் கொள்...

உயிரை வளம்கொள்...

தனி மனித சுகாதாரம்...

வலுவான ஆகாரம்...நல்

வாழ்வினுக்கு ஆதாரம் ...எனும்

கொரானோ தந்த தாரக 

மந்திரத்தை மனிதம் மறவாதிருக்கட்டும்...இன்னும்

எத்தனை விஷக்கிருமிகள் வந்தாலும்

உரம் கொண்ட 

உடல் கொண்டு போராடு... 

ஊசி காக்கும் எனும்

மாயயை விட்டொழி...

அன்பைப் பெருக்கு...

பயம் ஒழி...

நல்லதை எண்...சொல்...செய்...

கைப்பேசிகளில் தொலைந்து போகாமல்...மனிதர்களோடு

கை வீசி நட...

காலம் தாழ்ந்து விடவில்லை...

இயற்கையோடு இயைந்து வாழ் இன்றும் என்றென்றும்...

இந்த இனிய புத்தாண்டு மட்டுமல்ல...

இனி வரும் எல்லாப் புத்தாண்டும்

இனிமையே நல்கும்...

நன்மையே ஓங்கும் ...

வாழ்க வளமுடன்....


மனோஹரன் கேசவன்.


साहित्याला गुण द्या
लॉग इन

Similar tamil poem from Inspirational