🌳விருட்சம்🌳
🌳விருட்சம்🌳
காலம் காலமாய்
கல்ப விருட்சமாய்
கால் கடுக்க நின்றுகொண்டு
கனி காய் பூவென
கனிந்து தரும் தாய்மனம்
யார் அளித்ததோ
என் அன்னையே !
சுடும் சூரியன் அனல் பொறுத்து
குளிர் நிலவின் தணல் சுகித்து
பக லிரவிலும் நிழல் கொடுத்து
மாறும் பூமி சுழற்சியினும்
மனம் தள ராது
முளைத்து எழ
உன்னால் மட்டும் முடிகிறது
அத்தெங்கனம்?!
வெட்டிய பின்பும்
துளிர்விடும் அசாத்திய
துணிச்சல் யார் தந்தது ?!
பாறை இடுக்கிலும்
பாலைச் சூட்டிலும்
பனிப் பொழிவிலும்
இருள்நிறை காட்டிலும்
எப்படி வாசம்
செய்யமுடிகிறது
உன்னால் ?!
இயற்கையின் எழி
லோடு
நீ அன்றாடம் பேசும்
பாஷை தான் என்ன ?!
எங்களின் வசதிக்கு
உங்களை வீழ்த்தி
சுகம் காணும் எங்களுக்கு
நீ சொல்லும் சேதி என்ன ?!
மானுட இனத்தின்பால் அச்சம்கொண்டு
மண்ணில் முகம் புதைத்து
நீ அழும் சத்தம் எனக்கு மட்டும்
கேட்பது விந்தையா? மாயையா?!
எங்களுக்கு மூத்தவளே...
இனியவளே...
கருணை உடையவளே...
மாறும் இம்மானுடம் நிச்சயம்
உன் மனம் போலே...
ஒருலக இனம் போலே...
தொடரட்டும் உன் தவம்
நாங்கள் மேன்மையுற...
அரவணைப்போம் உம்மை
அன்பாலே
முளைத்தெழுக நீயும்
மண்மேலே ...
ஓ...
எங்களின் ஆதி உயிரே !
நன்றியுடன்...
MK 🎊 🕊️ ✍🏼