STORYMIRROR

Manoharan Kesavan

Abstract

4  

Manoharan Kesavan

Abstract

புல்லாங்குழல்

புல்லாங்குழல்

1 min
4

நீ பிடித்த புல்லாங்குழலாய் நாங்கள் இருக்க... இதோ நான் இருக்கிறேன் உன் புல்லாங்குழலைப் பிடிக்க ✨

ஒன்பது ஓட்டை புல்லாங்குழலில் எண்ணிலடங்கா நாத ஒலிகள்...அற்புதம்✨

நீ வாசிக்க 

நான் யாசிக்க 

பசுவும் கன்றுமாய் 

பந்தம் நமக்குள்ளே ✨

முழங்கால் பணிந்து நீ எனக்கு கற்றுத் தருவது பணிவு

எனும் பாடம் எனப் புரிந்துகொண்டேன்✨

நாதம் ஊதி

நல்லிசை பெருகி

கீதம் ததும்பி

மெல்லென முடியும்

மௌனத்தில் 

விரிந்து கிடக்கும்

உன் சாம்ராஜ்யம்✨

கார்குழல் வண்ணனோ 

கார்மேகக் கண்ணனோ

யார் அறிவார் உன் எழிலை...

இசைக்காதோர் இசைவ தெங்கனம் 

உன் திருவடியை✨

உள்ளும் புறமும்

நிறையும் ஒளியே...

மெல்லவே ஓது 

புல்லாங்குழலை...

உன் மழலை நான்

மகிழ்ந் திருப்பேன்

நீ தரும் ஞான ஒளியில்

என்றும் என்றென்றும்✨


நன்றியுடன்...

MK 🕊️🎊


Rate this content
Log in

Similar tamil poem from Abstract