தமிழ்மொழி
தமிழ்மொழி
மௌனம் கலைந்த விடத்தில் மலர்ந்தவள்
பேசுகின்ற மொழிகளுக்கு எல்லாம் மூத்தவள்
தலை இடை கடையென சங்கமித்து
உலகு புகழ் இலக்கியங்களாய் பரிணமித்து
வல்லினம் இடையினம் மெல்லினம் இவைகளின்
சொல்லினமாகி ஆழ்ந்த அறிவின் புகலிடமாகி
உயிர் மெய் உயிர்மெய் ஆய்தமென
இயல் இசை நாடகமாய் அழகுகொண்டு
தன்னிகரில்லாத் தமிழ் எனும் பெயர்க்கொண்டு
தரணியை ஆள்பவள் எங்களின் தாயவள்
தூயவள் என்றும் புதியவள் செம்மொழியானவள்
அழிவில்லாதவளவள் தாள் போற்றுவோம் தலைபணிந்து !
நன்றியுடன் ...
மனோஹரன் கேசவன்