STORYMIRROR

Narayanan Neelamegam

Inspirational

3.6  

Narayanan Neelamegam

Inspirational

தாய் அன்பு

தாய் அன்பு

1 min
35.2K


அன்பின் திரு உருவம்

அமைதியின் மறு உருவம்  


அழகின் பிறப்பிடம்

ஆனந்தத்தின் இருப்பிடம்

 

வலிகளை சுமந்தாய்

வழிகளை விதைத்தாய்

விதிகளை புகட்டினாய்

மனிதனாய் உருவாக்கினாய்  


அன்போடு அழைக்க கற்று தந்தாய் 

பண்போடு பழக கற்று தந்தாய்


தன்னலமற்று இருக்க கற்று தந்தாய்

தந்தை நிழலாய் இருக்க கற்று தந்தாய்


கருவாய் பத்து மாதம் 

சுமந்தாய் எனை.....!!

குழந்தையாய் பத்து ஆண்டு

வளர்த்தாய் எனை .....!! 

பிள்ளையாய் இருபது ஆண்டு  

ஆளாக்கினாய் எனை .....!!  


எனை சுமந்த நீ 

இம் மண்ணில் இன்னும்

எத்தனை சுமைகள்  

அமைதியாய் சுமக்கிறாய் 

மகளாய் சில சுமைகள் 

மனைவியாய் சில சுமைகள் 

அன்னையாய் சில சுமைகள் - ஆகையால் 

நீ ஒரு நில மகள்.....

பொறுமையின் ஒரு சிகரம்....!!!


உன் கனவுகள் 

உன் எண்ணங்கள் 

உன் உறவுகள் 

உன் சிந்தனைகள்

உன் ஆசைகள் 

உன் விருப்பங்கள்

எல்லாமே நான் தானோ .....!!! 


எனக்காக நீ பட்ட வலிகள் 

சொல்லி மாளாது - ஏன் 

கணிதமும் தோற்று போகும்  


உனை காண துடிக்கிறேன் 

என் கண்களை ஏமாற்றாதே ........!!!  

 

உன்னுடன் பேச துடிக்கிறேன்

என் மனதை  ஏமாற்றாதே ........!!!


உனக்கு சேவை செய்ய துடிக்கிறேன்

எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் ........!!!


கை பிடித்து நடந்தாய் - ஏனோ

கை விட்டு சென்று விட்டாய்........!!!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational