அம்மா
அம்மா
அன்பின் ஊற்று நீ
என் ஆலயத்தின் கடவுள் நீ
அப்பாவின் காதல் நீ
அதிகாலையின் சூரியன் நீ
வீடு என்றால் நீ
விளக்கின் ஒளி நீ
என் கோபத்தின் இரை நீ
அழுகையில் சிரிப்பு நீ
பசி என்றால் ஊட்டும் விரல் நீ
அக்சையபாத்திரம் நீ
நோயென்றால் முதல் வருபவள் நீ
சக்தியின் மூச்சு நீ
முழு முதல் ஆசான் நீ
செல்வத்தின் சேகரிப்பு நீ
அதிகாரத்தை உருவாக்குபவள் நீ
அதை ஆட்டி வைப்பவள் நீ
உலகத்தின் உயிர் நாடி நீ
உயிரின் தொடக்கம் நீ
என் முழு உருவின் முதல்செல் நீ
உன்னுள் வளர்ந்த உன் நீட்சி நான்
நான் உரைத்த முதல் வார்த்தை நீ
“ அம்மா”