பகல் கணவன்
பகல் கணவன்


கிழக்கு வெளுத்துவிட்டது
காரிருள் கலைந்தோடிவிட்டது
ஊடல் கொண்ட தலைவன் கதிரவன்
ஒளியுடன் உதித்துவிட்டான்
பூமகள் குளிர்காய்கிறாள்
கணவனின் வெதுவெதுப்பான அணைப்பில்
காதலர்கள் இணைந்துவிட்டார்கள்
கவிதை பாடத்தொடங்கிவிட்டார்கள்
ஆனாலும் அடிவயிற்றில் அனல்பிளம்பாக குமுறுகிறாள்
காதல் ராகம் இனித்தாலும்
எரிமலைக்கோபம் எதற்காக
குயில்கள் மெல்லிசை பரப்பினாலும்
குமரிமகள் கொதிப்பது எதற்காக
மாலை அந்திமாலை வந்தது
காதலில் ஊடலும் வந்தது
கரைகடந்து ஓடுகிறான்-தலைவன்
கடலில் கரைந்து&nb
sp;மூழ்குகிறான்
மஞ்சத்தின் உச்சத்தில் இருந்த
தம்பதிகள் ஸ்தம்பித்து போகிறார்கள்
என்னதான் கோபமோ ஏன்தான் ஊடலோ
கண்ணகியை விட்டுச் சென்ற கோவலனாய்
இங்கு காவியநாயகன் சூரியத்தலைவன்,
ஒரு எழுதப்படாத சிலப்பதிகாரம் இங்கு
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அரங்கேறுகிறது
ஆனால் சிலம்பும் இல்லை பாண்டியன் மன்னனும் இல்லை
வெறுமை இரவுகள் குளிரால் நடுங்குகிறாள்
அடிவயுற்றில் அனலாய் கொதிக்கிறாள்
விடியலுக்காக விழித்துக் காத்திருக்கிறாள்
பகல் கணவன் வருவான் என்று