அகல் விளக்கும் அவள் அழகும்
அகல் விளக்கும் அவள் அழகும்
மழை நாட்கள்
மின்சாரமில்லா இரவுகள்
நிலவும் நட்சத்திரங்களும்
மழை இருளில் நனையும் காலம்
என் மனமோ உன்னைத்
தேடித்தேடி திரியும்
உன்னை ஆடை கழற்றி
பஞ்சுத் திரி(யை)யாய் தீண்டித்தீண்டி
எரிய விடத்தூண்டும் இருள்
தங்க நிற அழகு
வெப்பம் தரும் வளைவுகள்
ground-color: rgba(255, 255, 255, 0);">எங்கிருந்தாலும் ஓடி வந்து
உன்னைச்சுற்றிக்கொள்வேன்
கண்கொட்டாமல் இரசிப்பேன்
உன் வெப்பச்சூட்டில்
குளிர்காய்வேன்
என் குழந்தை எண்ணம்
அடம்பிடிக்கும் - அது
உன் வளைவுகளை வருடிப்பார்க்கும்
உன்னைத் தீண்டிவிட்டு
சில்மிசம் செய்யும் - கடைசியில்
அணைத்து (விட்டு) கெண்டு தூங்கும்