மாறாக் காதல் மாற்றத்தோடு
மாறாக் காதல் மாற்றத்தோடு
விஞ்ஞானம் சொல்கிறது
காதலுக்கு காரணம் ஹார்மோன்கள் என்று
அந்த விஞ்ஞானமும் உன்னை பார்த்தால் சொல்லும்
காதலே நீதான் என்று
என் வீட்டருகே
இரு மைனாக்கள் இரை தேட வந்தன
அப்போது புரிந்தேன்
காதலுக்குத் தேவைப்படும் வார்த்தைகள்
காதலிக்கத் தேவையில்லை என்று
காதலுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் கேட்டாய்
சொன்னேன்
காதல் நீ கவிதை உன் பார்வை
புன்னகைத்தாய்
உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன்
காதலிலா கவிதையிலா
அதை மட்டும் கண்டிரா விட்டால்
எனக்கு காதலும் வந்திருக்காது
கவிதையும் வந்திருக்காது
உன் இதழ் சிந்தும் புன்னகையில் எனை தொலைத்தேன்
உன்னையும் தொலைத்தேன்
காதல் மட்டும் அப்படியே