நான் வருவேன்
நான் வருவேன்
தாள்கள் பாவம் செய்து விட்டன என் எழுத்துகளை சுமந்து
அவள் வாழைக் கைகளால் வருடப்பட்டு செங்காந்தள் இதழ்களால் வாசிக்கப்பட்டால் மோட்சம் அடையும்
நானும் பாவம் செய்தவனானேன்
அவளால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ
தாளுக்கு தந்த மோட்சத்தை
தலைவனுக்குத் தர தாமதம் ஏனோ
வாசிக்கவோ வருடவோ தேவை இல்லை
காந்தக் கண் பார்வையும்
கவிச் சிரிப்பும் போதும்
மோட்சம் அடைந்து விடுவேன் உன்னுள்
மறந்து போய் விடாதே
மறு பிறவி எடுக்க எனக்கு ஆவல் இல்லை
இப்பிறவியிலேயே என் பாவத்தை உன் பாவத்தால் மடிய செய்துவிடு
மறுபிறவி நீ வாராய் ஆனால்
மீண்டும் நான் வருவேன்
வருவேன் உனக்குள் உறைய

