தனிப்புறா
தனிப்புறா
காதல் தீ!
சிலருக்கு இதய தீபம்!
உதய கீதம்!
புதிய வேதம்!
பிடித்த சாதம்!
தேவதை பாதம்!
சிலருக்கு மின்னல் கோலம்!
எதிர்கால பாலம்!
ஈடுஇணைற்ற ஞாலம்!
சிலருக்கு காணல்!
சிலருக்கு ஆயுலளுக்கும்
அணு உலை!
பலருக்கோ உயிர்க்கொல்லி!இவர்களைப்போன்ற...
இலவுகாத்த கிளிகளுக்கோ!
காதல் சுவற்றிலடித்த பந்து!
முழுமை பெறா சித்திரம்!
விசேஷமில்லா சத்திரம்!கையொப்பமிடா பத்திரம்!
காவியமாகா கதை!
கருவறை சேராத..
அர்ச்சனை பூக்கள்!