அழகு செல்லம்
அழகு செல்லம்
வையத்தில்
ஜணிக்கும்
உயிர்களில்...
நீங்கள்
புன்னகை பூக்கள்!
கண் சிமிட்டும்
வசந்தம்!
கை கால் அசைகும்
அழகுலகம்!
சேட்டை சொத்து!
கேள்வி புதையல்!
ஒவ்வொரு செய்கையும்
பலவித பதில்கள்!
கனவு கோட்டை!
ராஜபாட்டை!
கோல்கள் அனைத்தும்
சூரியனை சுற்றுவது போல..
என் மொத்த உலகின்
மையம் நீ!
என் வாழ்க்கை சக்கரத்தின்
அச்சாணி நீ!
என் தலைமுறையின்
ஆனிமுத்து!
இப்பிறவி பெருங்க
டலை
நான் நீந்திக்கடக்க
வேண்டி நிற்கும் ஆற்றல் நீ!
எனது ஒளியேந்திய விடியலே!
அந்தியின் அழகிய செந்தூரமே!
இரவின் வென்மதுர பேரழகு
பெட்டகமே!
அந்த விண்மீன்கள்
எல்லாம்..
உன் செல்ல சிணுங்கள்களின்
சில துளிகள்!
என் திசைகளின்
தீர்க்கரேகை நீ!
உன் புன்னகையை
நினைவூட்டும்..
வானவில்!
அமிழ்தினும் இனிய வரம்!
இயற்கையின் பெறுங்கொடை
நீ!