மாதராய் பிறப்பதற்கே
மாதராய் பிறப்பதற்கே
வீடு..
ஓடி விளயாடும் வீதி!
தெரிந்தவர்!
தெரியாதவர்!
மிட்டாய் வாங்கும் பெட்டிகடை!
இயற்கை உபாதை கழிக்குமிடம்!
ஆடுமாடு குதிரைகளை...
மேய்ச்சலுக்கு
கூட்டி செல்லும் இடம்!
பள்ளிக்கூடம்!
பணியிடம்!
இருசக்கர வாகனத்தில்
தனியே பயணம்!
இரவு..
பகல்..
நல்ல நண்பன்..
காதலன் என
நம்பியவன்!
எங்கெங்கு காணினும்...
வன்கொடுமை!
என்று தணியும்
எங்கள் வேள்வி!
கருவறை ஒன்றே
எங்கள் பாதுகாப்பு கூடமென்றால்!
நாங்கள் வாழ்வது தான் எப்படி!
இதற்குத்தானா இந்த
மாதவம்!!
எங்கள் மகாகவியே.......