உயர்திணை
உயர்திணை
1 min
48
எனக்கு தெரிந்த
ஒருசில...
தன் கழிவிலிருந்து...
தன் வீட்டை கட்டிக்கொள்ளும்
சிலந்தி!
பல பயன்மிக்க
மெழுகு தரும் தேனீ!
உமிழ் நீரிலிருந்து
பட்டு நூல் தரும்
பட்டுப்பூச்சி!
எறும்பு...
பலம் உருவத்தில்
இல்லை..
உள்ளத்தில் என சொல்லும்
ஒழுக்க வரிசை!
சேமிக்க சொல்லும்
அதிகாரி!
தாய் பாசம்
சொல்லாத உயிர்கள் இல்லை!
கற்பு நெறி கூறும்
பறவைகளும் விலங்குயிரும்
உண்டு!
வாழ்விற்கான பாடம்!
இவையாவும் அக்றினைகளை
உயர்திணையாய் செய்யும்
ஒருசில உதாரணங்கள்!