கனவே களைவதேனோ
கனவே களைவதேனோ


பூவின் இதழ்களில்
துயில் கொள்வதாய்!
மேகத்தில் மிதப்பதாய்!
பறவை..
பட்டாம்பூச்சு..
றெக்கைகளில் பயணிப்பதாய்!
வானவில்லின்
ஒரு புறத்திலிருந்து
மறுபுறம் சருக்கியதில்..
கைகளிலும் பாதங்களிலும்
படிந்துபோன
வண்ணங்களோடு!
ஊசியால் குத்தியும்
உடையாத நீர் குமிழிகளை
வேறெங்கும் காணமுடியாது!
கானகமொன்றில்
அடைமழையில்...
நனைந்து!
கருமேகங்களுடைய
முக்கிருட்டில்!
பயந்து..வெளிச்சத்தில்
சனம் கண்டதாய்!
விட்ட நிம்மதி பெருமூச்சில்
வீடே மிறன்டுபோனது!
மஞ்சள் நிற ஆடையில்
ஒரு அம்மா..
மாமர வழியே...
ஆத்துகினற்றில் படியிரங்க!
இரவு அம்மன் வந்ததாய்
ஒருநாள்!
மழைவிட்டு விழல் கூரையில்
நீர் சொட்டிய நண்பகளில்
வீடு தீப்பிடித்ததாய்
கண்ணீர் மழை!
பாம்பு துரத்திய கனவின்
கனவின்
விசேஷம்..
கடித்ததா?
விட்டதுஷனி!
பேச்சற்று மூச்சிறைக்க..
விடிய விடிய அழுது தீர்த்தது!
சிரிப்பதை தவிர
வேறென்ன செய்ய!
ஜொலிக்கும் புதையலாய்
மக்கிய பட்டாடை நூல்!
திருவிழாவில்
கை பிடித்தபடி..
பிடித்ததை எல்லாம்..
கலர்கலர் ரிப்பன்!
வலையல்..
தின்பொருள்..
பொம்மைகள்...
விடிந்தது வெறுமனே!
திட்டிய திட்டிற்கு
சென்மத்திற்கும்...
பேசாத கோபம்!
அம்மாவோ அப்பாவோ
யாரோ ஒருவரின் மீது!
பேர் தெரியாத
சொந்தங்களேயில்லா
ஏதோ ஒரு ஊருக்கு
பேருந்தில்...
ஊர் வந்துவிட்டதா என
ஜன்னலில் எட்டிப்பார்தவாறே
இறங்கவுமில்லை!
திரும்பவுமில்லை!
கையிலிருந்த பயணச்சீட்டில்
நன்கு அறிந்த
அந்த ஊர் பெயரை..
பார்ப்பதற்குள்
வழக்கம்போல்
விடிந்து போனதால்
முடிந்து போன கனவு!!!