STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

5  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

மனித உடலின் இயற்கையான மொழிகள்!

மனித உடலின் இயற்கையான மொழிகள்!

1 min
493

நமது உடலுக்குத் தேவையான உணவினைக் கேட்கும் மொழி பசி!

 

நமது உடல் நலனிற்குத் தேவையான தண்ணீரினைக் கேட்கும் மொழி தாகம்!

 

நமது உடல் நலனிற்குத் தேவையான ஓய்வினைக் கேட்கும் மொழிகள் சோர்வு மற்றும் தலைவலி!

 

நமது உடலில் உள்ள நுரையீரலைத் தூய்மை செய்யும் மொழிகள் தும்மல், சளி மற்றும் இருமல்!

 

நமது உடலில் உள்ள அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றச் செய்யும் மொழி காய்ச்சல்!

 

நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழிகள் வாய்க்கசப்பு மற்றும் பசியின்மை!

 

நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது எந்த வேலையினையும் செய்யாதே என்று சொல்லும் மொழி உடல் அசதி!

 

நமது உடலில் செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றச் சொல்லும் மொழிகள் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு!

 

நமது உடலில் உள்ள குடல் கழிவுகளை வெளியேற்றச் சொல்லும் மொழி வயிற்றுப் போக்கு!

 

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் உள்ள நச்சினை நமது தோல் வழியாக வெளியேற்றச் செய்யும் மொழி வியர்வை!

 

நமது உடல் வெப்பநிலையினைச் சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கச் செய்யும் மொழி உறக்கம்!

 

நமது உடலில் முழுவதும் முறித்த நஞ்சைவெளியேற்றச் செய்யும் மொழி சிறு நீர் கழித்தல்!

 

நமது உண்ணும் உணவின் சத்தைப் பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றச் செய்யும் மொழி மலம் கழித்தல்!

 

நமது இயற்கையான உடல் இயக்கங்களை நாம் அறிந்து கொண்டால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்!

 

நமது உடலை நேசிப்போம்! 

 

நமது உடல் நலனினைப் பேணிக் காப்போம்!

 

நமது எண்ணங்கள் நமது உடல் நலனினை நேசிப்பதாக இருக்கட்டும்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics