நான் நானாக வாழ்வேன்
நான் நானாக வாழ்வேன்
நான் நானாக வாழ்வேன்
பத்மினி ஆகிய
நான் நானாக வாழ்வேன்
அம்மா அப்பா பெண்ணாக
அண்ணன் அக்கா தங்கையாக
தங்கை தம்பியின் அக்காவாக
உறவுகளின் உறவாக
எண்ணற்ற எண்ணங்களுடன்
இல்லத்தில் சுற்றி வந்த போதும்
நான் நானாக வாழ்வேன்
பள்ளி மாணவியாக
பருவமங்கை தோழியாக
கன்னி மலர் கொய்ய வந்த
கணவனுக்கு மனைவியாக
அத்தை மாமாவிற்கு மருமகளாக
ஓரகத்தி இருந்தாலும் ஓர்ப்படி இருந்தாலும்
கொழுந்தன் இருந்தாலும்
கொண்டாரின் அண்ணன் இருந்தாலும்
ஒப்பற்ற புக்ககத்தில் ஒன்றியே வாழ்ந்தாலும்
நான் ந
ானாக வாழ்வேன்.
தாய்க்குத் தலைமகன் எனத்
தன் மகன் கண்டாலும்
மற்றோர் மகன் கண்டு மனமகிழ்ந்து நின்றாலும்
ஆசைக்கோர் பெண்ணென
மகளை அணைத்து மகிழ்ந்தாலும்
தாய்மை உணர்வோடு
தரணியை ஆண்டாலும்
பத்மினி ஆகிய நான்
நான் நானாக வாழ்வேன்.
பட்டங்கள் பல பெற்றாலும்
பணிகள் பல செய்தாலும்
பயணங்கள் பல செய்து
பார் சுற்றி வந்தாலும்
எட்டு திசை எங்கும்
என் நினைவுகள் செல்ல
எல்லாம் வல்ல இறைவன்
என் உயிர் காத்தாலும்
என் பெயர் கொண்டு
நான் நானாக வாழ்வேன்.