வண்ணக் குடை
வண்ணக் குடை
1 min
5
மழை வருது மழை வருது
மாரி பொழியும் மாதம் இது
ஏழு வண்ண வானவில்
விண்ணில் தோன்றி மயக்குதே
கையில் உள்ள குடையிலும்
ஏழு வண்ணம் தெரியுதே
குதித்து குதித்து நடந்ததால்
ஈரமானது உடையும்தான்
குடைக்குள் குளிரும் வந்ததே
குடையும் காற்றில் பறந்ததே!
