அம்மா
அம்மா
என் அம்மா ...
அவள் ஓர் யசோதை!
தலைமகன் பெற்றெடுத்த பேரனுக்கு ராதாகிருஷ்ணன் எனப் பெயரிட்ட
என் அம்மா ஓர் யசோதை!
பாலைக்காய்ச்சி தயிராக்கி பாங்காக மத்தால் கடையும்
என் அம்மா ஓர் யசோதை! மத்தில் திரளும் வெண்ணை கண்டதுமே
ராதாகிருஷ்ணன் எனக் குரல் கொடுக்கும்
என் அம்மா ஓர் யசோதை!
பஞ்சு போன்ற வெண்ணையை
மண் உண்ட கண்ணன் அவன் வாய் திறந்து நிற்பது போல் முன் வந்த பேரனுக்கு ஊட்டி மகிழ்ந்த
என் அம்மா யசோதை தான்.
