கூத்து
கூத்து
மனசாடுது கூத்து
மறந்தாடுது கூத்து
பட்டாம்பூச்சியை சேர்த்து
பறந்தாடுது கூத்து
யார் சொல்லித்தந்த கூத்து
யாரும் அறியா கூத்து
மனசோடு மனசு ஆடும் கூத்து
மருவி மருவி ஆடுது பார் சேர்த்து
ஆள் அரவமில்லா இடத்தே கூத்து
பால் பேதமில்லா கூத்து
மனசாடுது அகக்கூத்து
பார்வை பேசுது புறம் பார்த்து
உடலும் உயிரும் மாறி ஆடுது துடிக்கூத்து
உடலுமில்லை உயிருமில்லை மரணமில்லாக்கூத்து
பூதமாடுது கூத்து
பஞ்ச பூதமாடுது கூத்து
அணுவுக்குள்ளும் கூத்து
மானுட ஆசைக்குள்ளும் கூத்து
உள்ளும் புறமும் வெளியும் யாவும் கூத்து
