இன்னும் சிலசொற்கள்
இன்னும் சிலசொற்கள்
மகளிர், மாது,
பாவை, பூவையர்,
கோதை,தையல்,
மங்கை, நங்கை
மடந்தை, மடவோள்,
காந்தை, காரிகை,
இன்னும் பல சொற்கள்
பெண்டீரை குறிப்பிட
அன்னைத் தமிழ்மொழியின்
அகராதியில் இருந்தாலும்..
குறையாத கரிசனை
நிறைவான அனுசரணை
மிகையில்லா புகழ்ச்சி
இணையில்லா மகிழ்ச்சி
பஞ்சமில்லா விருந்து
வஞ்சமில்லா மனது
கபடமற்ற எண்ணம்
சபலமற்ற உள்ளம்
ஓய்வில்லாத ஒத்துழைப்பு
தொய்வில்லாத உடலுழைப்பு,
தன்னலமில்லா பரிவு
தன்னிகரில்லா துணிவு,
இவையாவும் இதுபோன்றவையான
இன்னபிற இணைச்சொற்களும்
பெண்களென்றே பொருட்படுதல்
எனக்குள்ளே எழுந்த இலக்கணம்..