தொடரட்டும் தோழமை
தொடரட்டும் தோழமை
தினம் தினம் பார்க்கும்
எத்தனை மனிதர்கள்..
பக்கத்தில் வசித்திடும்
எத்தனை குடும்பங்கள்..
உடன் பணிபுரிந்திடும்
எத்தனை நபர்கள்..
பள்ளிக் கல்லூரிக்கால
எத்தனை பழகியவர்கள்
இன்னும் எத்தனை
எத்தனையோ இடங்களில்
பற்பல தருணஙகளில்
எத்தனை அறிமுகங்கள்..
அத்தனை பேரில்..
உனக்கு பிடித்த எல்லோருமா
நண்பர்களானார்கள்..?
நீ விரும்யிய எல்லோருமா
உன் நட்பை விரும்பினார்கள்?
நீ விரும்பிய பலரில் சிலரே
உன்னில் எ
தையோ விரும்பி
உன் நட்பை போற்றி ஏற்றி
அன்போடு தொடர்கிறார்கள்
நண்பர்கள் நாளில் ஏதோ
சடங்கு போல அலைபேசியில்
வாழ்த்தனுப்பி கடமை
கழிந்ததாக கடந்து போகாமல்
வாய்ப்பு வாய்க்கும் போதும்
நேரம் கிடைக்கும் போதும்
தவறாமல் , தவறவிடாமல்
பேசியும், சந்தித்தும்...
நட்பிற்குள் புத்துணர்வூட்டி
உயிரோடு கலந்துபோன
உன்னதமான உறவிற்கு
புத்துணர்வு அளித்திடுவோம்
தொடரும் நட்புடன்
தொடர்கிறேன்..
இரா.பெரியசாமி..