ஹைக்கூ..சிறு கவிதைகள்..
ஹைக்கூ..சிறு கவிதைகள்..
இணை கால்கள் தள்ளாடும் போது
துணை காலொன்று முளைக்கிறது..
ஊன்றுகோல்
சுழன்றாடும் ஒற்றைக் காலின்
சுவடுகட்குள் எத்தனையோ கதைகள்
எழுதுகோல்
உலகத்தின் பசிக்கு உணவளிக்க
நிலத்திலே எழுதினான் உழவன்..
கலப்பையால்
தலை திருகி எறியப்பட்ட நிலையில்
சாலையோரம் இறைந்து கிடந்தன.
மதுப்புட்டிகள்
ஈசனும், கிறிஸ்துவும் அல்லாவும்
எல்லா வீட்டிற்குள்ளும் தரிசனம்..
தொலைக்காட்சி
பறந்திட சிறகுகள் இருந்தும்
சிறைபட வைத்தது அழகு ..
கூண்டுக்கிளி..
இரா.பெரியசாமி..