STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Drama Classics

5  

Shakthi Shri K B

Abstract Drama Classics

பிரியா விடை

பிரியா விடை

1 min
491

எண்ணுடன் நீ இருந்த நாட்கள் குறைவாக இருக்கலாம்,

ஆனால் நீ என் வாழ்வின் மிக முக்கியமான அங்கம்.

உன்னை பற்றி வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை,

அனைத்து வித மலர்கள் போல 

உன்னுடைய செயல்கள் இருக்கும்.

நினைவில் நீங்க இடம் பிடித்தாய் என் மனதில்,

என்னை உற்சாகப்படுத்தம் மாபெரும் சக்தி நீ.

மற்றவர்களால் எனக்கும் நிகழும் பிரச்சனை அனைத்துக்கம், 

ஒரு தீர்வு தரும் பாலமாக இருந்தாய்.


உடல் வலிமை இழந்தாலும் உன் மன வலிமையால் என்னை வழிநடத்திச் சென்றாய்.

யார் என்னை பற்றி என்ன கூறினாலும், 

என்னை என்றும் ஊக்குவித்து வெற்றி பெற  செய்தாய்.

இவ்வுலகில் எனக்கு ஒரு தோழியாக 

தாய்யாக என்னை வழிநடத்தி சென்றாய்.

மாசற்ற உன் பாசம் என் வாழ்கையின் ஒளி விளக்கு,

சற்று காலமே நீ என்னை அறிந்ததாலும் என்னை விட்டுக்குடுக்காமல் இருந்தாய். 

உன் மகள் பெற்ற பிள்ளையும் நானில்லை,

உன் மகனின் பிள்ளையும் நான் இல்லை,

ஆனால் உன் மகனின் மகனை மணந்தவள் நான்.


என்னையும் நீ உன் பேர குழந்தையாக கருதி அன்பு செலுத்திய தருணங்களை மறக்க இயலாது.

 கடந்த ஆண்டு உன் இறுதி மூச்சை நீ விட்டபின் முழு உலகமும் நிசப்தமானது என் வாழ்கையில்.

பிரியா விடை கொடுத்து நீ சென்றுவிட்டாய்,

உன்னை போல எனக்கு உறுதுணையாக யார் இனி இருக்க முடியும்?

உன் அன்பும் நேசமும் என்றும் என்னுடன் இருக்கும் பிரியா விடை கொடுக்காது!!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract