STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Children

4  

Shakthi Shri K B

Drama Classics Children

சுவையின் நினைவு

சுவையின் நினைவு

1 min
8

என் நாவில் இன்னும் இருக்க அந்த சுவை,

சற்றும் மறக்க முடியாத சுவை அது,

நானும் என் அக்காவும் பள்ளிக்கு செல்வோம் காலையில் அப்பாவின் மிதிவண்டியில்,

பின் பள்ளி முடிந்தவுடன் நடந்து வருவோம் மெல்லமாக,

வரும் வழியில் இருக்குமே அந்த பாட்டியின் சின்ன வண்டி கடை,

எங்கள் ஊரின் மிக பிரபலமான மாலை நான்கு மணி பாட்டி கடை,

பாட்டியின் கடையில் இருக்கும் பலகாரம் பல,

அதில் எனக்கு பிடித்த பலகாரம் இனிப்பு அப்பம்,

அப்பம் வட்டமாக வெல்லமும் மாவும் கலந்து சுவையாக இருக்கும்,

அந்த சுவையான அப்பம் வாரம் ஒரு முறை சாப்பிட நானும் ஆக்காவும் இரண்டு ரூபாய் சேத்து வைப்போம் அம்மாவிடம் கேட்டு,

ஆளுக்க இரண்டு என்று அதை சாப்பிடும் போது மனதில் மகிழ்ச்சி,

நாவில் சுவை மறுநாள் காலை வரை இருக்கும்,

இன்று முப்பது வருடங்களாக ஆன பிறகும் நானும் என் அக்கவும் அந்த பாட்டியின் வீட்டிற்ககு சென்றோம்,

பாட்டியின் கையால் சுட்ட அப்பம் சாப்ட்டோம்,

அந்த சுவையின் நினைவு மறுமுறை வந்தது எங்களுக்கு.


Rate this content
Log in

Similar tamil poem from Drama