தவறவிட்ட மழை
தவறவிட்ட மழை
அபூர்வமான மழையினை நாம் எப்போதும் தவறவிட்டு விடுகிறோம்
காலையில் எழுந்து பார்த்தால் எல்லா காகிதப் பூக்களிலும் மழைநீர் சொட்டுகிறது எல்லா சாமந்திப் பூக்களும் வாசனையோடு பூத்திருக்கின்றன
ஆனால் நாம் தூங்கியது தூங்கியதுதான் மழையை தவறவிட்டவர்கள் தவறவிட்டவர்கள்தான்
அப்படி ஒரு அலாதியான சந்தோசத்தைத்தான் நானும் தவறவிட்டு விட்டேன்
ஆனால் இன்னும் ஈரம் காயாத பூமி அப்படியேதான் இருந்தது
இன்னமும் இலைகளில் நீர் சொட்டிக் கொண்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதை நான் என் இல்லத்தில் சந்தித்தேன்
எனக்காக மட்டும் மறுபடியும் மழை பெய்யும் என்று நான் காத்திருந்தேன்