வருத்தம்
வருத்தம்
1 min
730
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என
நான் நினைக்காத நாள் இல்லை
ஆனால்
உன் துயரங்களின்போது மட்டுமே
நான் உன் நினைவுக்கு வருகிறேன்
உன் வருத்தங்களைத்துடைக்க
நான் எனக்குத் தெரிந்த
எல்லாவித்தையையும் காட்டுகிறேன்
ஆனால்
நீ சிரிக்கும்போது
ஒரு நாளும் நான் உன்னோடு இருந்ததில்லை
உன் எல்லா துக்கங்களும்
இல்லாமல் போகவேண்டும்
என்பதுதான் எப்போதும் என் பிரார்த்தனை
அப்படி இல்லாமல் போகும்போது
அந்த துக்கங்களோடு சேர்ந்து
நானும் இல்லாமல் போவேன் என்பதுதான்
எனது ஒரே வருத்தம்