STORYMIRROR

Se Bharath Raj

Drama Tragedy Classics

5  

Se Bharath Raj

Drama Tragedy Classics

நேற்று போல் இன்று யாரும் இல்லை

நேற்று போல் இன்று யாரும் இல்லை

1 min
438

நேற்று போல் இன்று யாரும் இல்லை.

நேற்று அன்பு வைத்திருப்பதாக கூறிய ஒருவருக்கு

இன்று என்மீது வெறுப்பு வந்துவிட்டது.


அவரிடத்தில் 

ஏன் என்று கேட்காமல்

பதிலை என்னுள்ளே தேடி 

காணாமல் போகிறேன்.

கேட்க வேண்டும் என்றுதான் சில நிமிடங்கள் தோன்றுகிறது.

கேட்காமலிருந்து விடலாம் என்றும் சில நிமிடங்கள் தோன்றுகிறது.


நேற்றைய சத்தியங்கள் வாக்குறுதிகள் 

அனைத்தையும் அவரிடத்தில்

நியாபக படுத்த தான் தோன்றியது அன்று.

பின் வேண்டாம் என்று 

அந்நினைவுகளை மூட்டையில் முடிந்து 

என் வீட்டு பரண் மீது வைத்துவிட்டேன்


அதனை பிரித்து பார்க்காமலே 

அவரின் நினைவலைகள்

"என்னை தூக்கு 

என்னை தூக்கு", என்று 

ஆறு மாத குழந்தையாக 

சிறு கைகளை உயர்த்தி கொண்டு என்னிடம் வந்துவிடுகிறது.


இறக்கி வைக்க நான் முற்பட்டாலும்

என் சட்டையை இறுக்க பிடித்து கொண்டு 

இறங்க மறுக்கிறது.

என் தோள் மீது இருந்தவாறே

ஊர் அழகை உள்ளுணர காண்கிறது.

என்னால் தான் 

எதையும் உணர முடியவில்லை.  


Rate this content
Log in

Similar tamil poem from Drama