STORYMIRROR

Se Bharath Raj

Drama Classics Children

5  

Se Bharath Raj

Drama Classics Children

மாமாக்கள்

மாமாக்கள்

1 min
479

மனைவியின் அப்பாவிற்கும்

மகளின் கணவருக்குமான உறவு

இயல்பு நவிற்சி அணியில்

மரியாதையோடு உருவாக்கப்பட்ட

ஓர் கலங்கமற்ற காவியம்.


அம்மாவின் சகோதரனுக்கும்

சகோதரியின் பிள்ளைக்குமான உறவு

பிளவிட முடியா 

பின் தொடர்ந்து வரும்

பிணி நீக்கும் தேவதைகளின் நிழல்.


அப்பாவின் அக்காவின் மகனுக்கும்

அம்மாவின் சகோதரனின் மகனுக்குமான உறவு

உள்ளம் உருக செய்யும்

உள்மனதை சாத்த படுத்தும்

கோவில் கருவறை.


சகோதரியின் கணவருக்கும்

மனைவியின் சகோதரனுக்குமான உறவு

அதிகம் பேசி கொள்ளாமல்

அளவில்லாது அன்பு காட்டும்

அப்பாவின் கண்கள்.


என் மாமாக்கள் 

என்னை தோளில் தூக்கி கொண்டும்

மிதி வண்டியிலும்

மோட்டார் வாகனத்திலும்

பயணப் படுத்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு முறையும்

என்னை அவர்கள் இறக்கி விடும்போது

இன்னுமோர் முறை

உடன் சேர்ந்து பயணப்பட மாட்டேனா என்ற கேள்வி

என்னுள் எழும்.


ஆறு மாதத்தில் 

அழுது கொண்டு 

என்னைவிட்டு வீடு சென்ற

என் அக்காவின் மகனுக்கும்

அக்கேள்வி எழுந்திருக்க கூடுமா?


கட்டாயமாக எழுந்திருக்க கூடும்.

ஏனெனில் அவனுக்கும் எனக்கும்

வயது மட்டும்தானே வித்தியாசம்.



Rate this content
Log in

Similar tamil poem from Drama