புரையோடிய அரசியல்
புரையோடிய அரசியல்


சாதி மதத்தால் பிளவுபட்டும்
மோதி முட்டி சண்டையிட்டும்
வீரம், மானமென வசனம் பேசியும்
காரசாரமாக தரந்தாழ்த்தி பேசியும்
தரமேயில்லா தன்னை தூக்கியும்
மற்றோரை தரந்தாழ்த்தி தாக்கியும்
பதவிக்காக மானத்தை விற்றும்
பணத்துக்காக அறத்தை கொன்றும்
அரசியலில் வஞ்சனைகள் புரிந்தும்
அறத்தின் கழுத்தினை நெறித்தும்
இயற்கை வளங்களை சூறையாடியும்
நாட்டின் செல்வங்களை களவாடியும்
சரியான கோணத்தில் பாராமல்
சாய்ந்து கோணலாக பாரக்கும்
ஊனமான எண்ணங்கொண்ட
ஈனமான மனிதர்களைக் கண்டு
மேன்மக்கள் பயந்து ஒதுங்காமலும்
கண்டும் காணாமல் போகாமலும்
பணிந்து பயந்து முடங்கி கிடக்காது
துணிந்து கொதித்தெழுந்து ஓயாது
அறங்காக்க வாய்ப்புள்ள வழிதேடி
அறவழியில் இறுதி வரை போராடி
புரையோடிய சமூகத்தை சீரழிக்கும்
சக்திகளிடமிருந்து மீட்டெடுத்து..
நாளைய தலைமுறையின் வளமான
வாழ்விற்கு சீரிய வழியமைப்போம்....
இரா.பெரியசாமி..