விரசமில்லாக் குட்டிக் காதல்
விரசமில்லாக் குட்டிக் காதல்
ஆரம்பப்பள்ளிப் பருவத்தில்
ஆசையோடு அருகிலமர்ந்து
இனிக்கும் கமர்கட்டை
எச்சில்பட கடித்துப்பகிர்ந்து
கைகோர்த்து, உடன்சேர்ந்து
விளையாடிய குட்டைப்பாவாடை
பட்டாம்ப்பூச்சி குட்டி தேவதை
இன்னும் நின்று மின்னுகிறாள்
விண்மீனாக
எனது நினைவு வானில்..
சிறுமியான அவளோடு
கண்ணாமூச்சி
விளையாட்டில்
கதவிற்கு பின்னாலும்
கட்டிலின் அடியிலும்
மாட்டுத்தொழுவத்திலும்
மூச்சிறைக்க சேர்ந்து
ஓடிச்சென்று ஒன்றாக
ஒழிந்திருந்த போது
என் மீது பட்ட அவளது
மூச்சுக் காற்றின்
வேகமும் வெப்பமும்,
முச்சிறைக்கும்,
போதெழும்பிய ஒலியும்
இன்றும் நான்
தனிமையுடன்
உறவாடும் தருணங்களில்
சில வேளைகளில்
இன்னும் பசுமையாய்
என் நினைவுகளோடு
நின்று உறவாடும்
இளமைக்காலத்தின்
இனிமையான நிகழ்வுகள்.
இப்போது நினைத்தால்
அதுவும் ஒரு வகையான
குஞ்சுக் காதலோ
பிஞ்சுக் காதலோ
அறியாப் பருவத்தில்
அறியாமல் வந்த
இனம் புரியாத
விளையாட்டு வயதின்
விரசமில்லாத
குட்டிக் காதல்
இன்றும் இதயத்தில்
நீக்கமற நிறைந்திருந்து
நினைவுகளில்
மறைந்திருந்து
சில வேளைகளில்
மனதோடு இணைந்து
விளையாடுகிறது..