STORYMIRROR

Se Bharath Raj

Drama Classics Inspirational

5  

Se Bharath Raj

Drama Classics Inspirational

ஏதோ ஓர் கவிதை

ஏதோ ஓர் கவிதை

1 min
476

ஏதோ ஓர் கவிதை.

யார் பேச்சையும்

அது கேட்பதே இல்லை.

தன்நிலை மோசமாவதை உணரும்போதெல்லாம்

தனக்கு பிடித்தமான வார்த்தைகளை 

தேர்ந்தேடுத்து 

தன்னை தானே தேற்றி கொள்கிறது.


அதற்கு விலை இல்லை.

எவ்வளவு விலை கொடுத்தாலும்

அதனை வாங்க இயலாது.

வேண்டுமென்றால்

அதன் விருப்பத்தோடு 

உருப்புகளாய் அதனுளிருக்கும்

சில உவமைகளை எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.


அக்கவிதைக்கு அழகு

எழுதியிருக்கும் காகிதத்தில் இல்லை.

கைவிரல் பிடித்திருக்கும் எழுதுகோலிலுமில்லை.

அதன் கரு 

உருவான இடம் கூட இல்லை.

அவை வாசிக்க படும் 

வாசகனின் உச்சரிப்பிலே அடங்கியுள்ளது.


அகோர முகமுடைய 

அவனுக்கும் அவளுக்கும்

ஆறுதல் அக்கவிதையே.

பறிமாறிக் கொள்ள 

முத்தங்கள் இருப்பினும்

அதில் அவர்களுக்கு முழுமையே கிட்டவில்லை.


சரியான இடைவெளி விட்டு

மூச்சு வெளிப்படும் போது 

அக்கவிதை வெளிப்படுத்த

காமமும் தோற்று போய்விடுகிறது.


சில காலம் கடந்த பின்னர்,

குழந்தை போல

ஓர் கவிதை

அவர்களுக்குள் பிறந்தாயிற்று.

முன்னிருந்த 

அந்த ஏதோ ஓர் கவிதை

கரி பொருளாக உருமாறி

மண்ணுள் சென்று

வைரமாக மீண்டும் பிறக்கிறேன் என கூறிற்று.


Rate this content
Log in

Similar tamil poem from Drama