இழப்பைச் சமண் செய்ய ஒரு வங்கி
இழப்பைச் சமண் செய்ய ஒரு வங்கி


பிறப்பு இருவர் தர வருவது
இறப்பு யாருமே தராமலே வருவது இரண்டுமே வருவதென்றால் போவதுதான் என்ன? குழந்தைப் பருவம் தாண்டும்போது குற்றமின்மைப் போகிறது இளமைப் பருவம் தாண்டும்போது பணிவு போகிறது படிப்பை முடிக்கும்போது சேமிப்புப் போகிறது காதலில் விழும் போது கணிப்புப் போகிறது மணந்து முடிந்தால் நிம்மதி போகிறது வயது முதிரும்போது அழகு போகிறது வேலைக்குச் சென்றால் மரியாதை போகிறது வணிகத்தில் நுழைந்தால் பணம் போகிறது அரசியலில் புகுந்தால் அறிவு போகிறது மதத்தில் இணைந்தால் ஞானம் போகிறது வரவுக்கு மீறிய செலவா வாழ்க்கை? வாழ்க்கை எப்போதும் இழக்கும் வாணிபமா? இழப்பைச் சமண் செய்ய இல்லையா வாழ்க்கை வங்கிகள்? மரணப் பொழுதில் கிடைத்தது விடை மரணம் எனும் இணைய தளம் என்னை இணைக்கப் போவது சூன்யத்துடன் சூன்யத்தில் லாபமாவது நஷ்டமாவது!